69. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 69
இறைவன்: நீலகண்டேஸ்வரர்
இறைவி : நீலமலர்க்கண்ணி
தலமரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : நீலோற்பல தீர்த்தம்
குலம் : பாணர்
அவதாரத் தலம் : எருக்கத்தம்புலியூர்
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - மூலம்
வரலாறு : நடு நாட்டில் எருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டினம்) என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். யாழ் வாசிப்பதில் சிறந்து விளங்கினார். திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களிலெல்லாம் உடன் சென்று அவர் பாடல்களுக்கு யாழ் வாசித்தார்.
முகவரி : அருள்மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திரப்பட்டினம் – 608703 விருத்தாசலம் வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு குருக்கள்
அலைபேசி : 9444063806

இருப்பிட வரைபடம்


ஆழி சூழுந் திருத்தோணி யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர்.

- பெ.பு. 4229
பாடல் கேளுங்கள்
 ஆழி சூழும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க